புது லுக்! புது கெட்டப்! தாய்லாந்தில் இருந்து நெருப்பாய் சென்னை திரும்பிய சிம்பு!

விடுமுறை நாட்களை கோலாகலமாக வெளிநாட்டில் கழித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார் நடிகர் சிம்பு.


சிம்பு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு தன்னுடைய தந்தை இயக்கிய காதல் அழிவதில்லை என்னும் திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சிம்பு.

இதற்குப் பின் பல திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் சிம்பு. இவர் நடித்த திரைப்படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே சினிமா திரையில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக தாய்லாந்தில் தன்னுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாக கொண்டாடி வந்தார். 


சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தாய்லாந்தில் விடுமுறை நாட்களை கொண்டாடி வந்த சிம்பு தற்போது மீண்டும் புது கெட்டப்பில் தாய் நாடு திரும்பியுள்ளார். தற்போது இவர் சென்னை ஏர்போட்டில் வந்து இறங்கிய போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதனைப் பார்த்த சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.