தன் மரணத்தை முன்கூட்டியே கணித்து தன் தாயிடம் கூறிய நடிகர் சேதுராமன்..! சற்று முன் வெளியான திகிலூட்டும் செய்தி!

மறைந்த மருத்துவர் மற்றும் நடிகருமான சேதுராமன் தன்னுடைய வாழ்வில் நடைபெறப் போகிற சோகங்களை பற்றி தானே கணித்து கூறியதாக அவரது தாயார் தற்போது கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் மருத்துவர் சேதுராமன். இவர் சென்னையில் 3 மருத்துவமனைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தோல் நிபுணரான சேதுராமன், சிறந்த மருத்துவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்த செய்தியை அறிந்த நண்பர்கள் மற்றும் திரையுலகினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

நடிகர் மற்றும் மருத்துவருமான சேதுராமனின் தாயார் தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் தன் மகனைப் பற்றிய உருக்கமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது சேதுராமன் உயிரிழப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக தன் தாயாரிடம் சென்று மிகவும் மோசமான கனவை தான் கண்டதாக கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட அவரது தாயார் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி இதனை எண்ணி பயப்படாதே என்று தட்டிக் கழித்திருக்கிறார். பின்னர் இரண்டு நாட்கள் அடுத்து அவரது மனைவி உமையாள் இடம் தனக்கு ஏதோ தவறாக நடைபெறப் போகிறது என மனதில் தோன்றுவதாக கூறியிருக்கிறார். அப்பொழுதும் அவர்கள் யாரும் இதனை பெரிதாக எண்ணவில்லை.

இதனையடுத்து திடீரென மாரடைப்பால் மருத்துவர் சேதுராமன் பரிதாபமாக உயிரிழந்தார். என் மகன் அப்போது கூறும் பொழுது நாங்கள் சற்று ஜாக்கிரதையாக இருந்து இருந்தோம் ஆனால் இவ்வாறு நடந்து இருக்காமல் தடுத்திருக்கலாம் என அவர் மிகவும் வருத்தத்துடன் கூறி இருக்கிறார். தற்போது சேதுராமனின் தாயார் பேசியுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.