நடிகரும் மருத்துவருமான சேது திடீரென மரணம் அடைந்த நிலையில் அவரது இளம் மனைவியும் பச்சிளம் குழந்தையும் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
36 வயதில் திடீரென மரணம் அடைந்த இளம் நடிகர்..! தவிக்கும் இளம் மனைவி, பச்சிளம் குழந்தை!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமான சேது நேற்று இரவு மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வெறும் 36 வயது மட்டுமே ஆகிறது. சேதுவின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளது. கடந்த ஆண்டு தெலுங்கில் ராஜா ராஜி 2 எனும் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு சேது வந்திருந்தார்.
மேலும் கடந்த 2016ம் ஆண்டு உமா மகேஸ்வரி எனும் பெண்ணை சேது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் தான் சேது திடீரென மரணம் அடைந்துள்ளார். இதனால் மனைவி உமா மகேஷ்வரி மற்றும் குழந்தை தவிக்கும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது.
36 வயதே ஆன நிலையில் சேது மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அவரது நண்பர்களையும் அதிர வைத்துள்ளது. மேலும் திரையுலகமும் சேதுவின் மரணத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. காரணம் 36 வயதில் நடிகர் ஒருவர் மரணம் அடைந்துள்ள நிலையில் கொரோனா பரவுவதால் அவரது மரணத்திற்கு கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.