நெருங்கும் காமெடி நடிகர் சதீஷ் திருமணம்..! மணமகள் சிந்துவின் அண்ணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சதீஷ் ஆவார்.


காமெடி நடிகர் சதீஷ் க்கும், சிக்ஸர் பட இயக்குனர் சாச்சி அவர்களின் தங்கை சிந்துவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. சிக்ஸர் திரைப்படத்தில் நடிகர் வைபவ் உடன் காமெடி நடிகர் சதீஷும் இணைந்து நடித்துள்ளார்.

இதனால் நடிகர் சதீஷும் சிக்ஸர் பட இயக்குனரின் தங்கை சிந்து அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.ஆனால் சிக்ஸர் பட இயக்குனரும் மற்றும் நடிகர் சதீஷ் திருமணம் செய்து கொள்ள உள்ள சிந்துவின் அண்ணனுமான சாச்சி அவர்கள் நடிகர் சதீஷ் மற்றும் என் தங்கை சிந்துவுக்கும் நடக்க உள்ள திருமணம் முறைப்படி நிச்சயக்கப்பட்ட ஒன்று என ட்விட்டரில் ஒரு பதிவீட்டை செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். சிக்ஸர் பட இயக்குனர் சாச்சியின் ட்விட்டர் பதிவு மூலம் நடிகர் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்று தெரியவந்துள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெற உள்ள நடிகர் சதீஷ் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.