யோவ் நீ எம்எல்ஏவே இல்ல..! கமல் விழா மேடையில் நாட்டாமை செய்த சரத்துக்கு ஏற்பட்ட பரிதாபம்!

உலக நாயகன் கமல்ஹாசன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் "கமல் 60" என்ற விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


அந்த கமல் 60 நிகழ்ச்சியில் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் தளபதி விஜயின் தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவானது சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற தளபதி விஜய்யின் தந்தை சந்திரசேகர் , ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசத்தை பற்றி பேசினார். அப்போது பேசிய அவர் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சந்திரசேகரை தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார் "ரஜினியும் கமலும் சேர்ந்து அரசியலுக்கு வருவது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது குறித்து, சட்டமன்றமாக இருந்திருந்தால் தகுந்த பதில் கொடுத்திருப்பேன் என்றார். ஆனால் நான் இந்த மேடையை அதற்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றார். 

சரத்குமாரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களின் மத்தியில் சற்று சலசலப்பை உண்டாக்கியது. சில ரசிகர்கள் சரத்குமார் சட்டமன்ற உறுப்பினராக தற்போது இல்லை, மறந்து போச்சா? எனக் எதிர்க் குரல்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.