ஒரே ஒரு பாடல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியரின் உதட்டை ஹீரோ கடித்து இழுப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
வைரல் நாயகி பிரியா பிரகாஷ் வாரியரின் உதட்டை கடித்து வைத்த நாயகன்!
ஒரு
அடார் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராகி எனும் பாடலில் நாயகனை
பார்த்து கண் அடித்து ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
அந்த ஒரே ஒரு காட்சிக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமானார் பிரியா பிரகாஷ்.
தற்போது வரை ஒரு அடார் லவ் திரைப்படம்
வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் இந்தியில் ஒரு படத்தில் கதாநாயகியாகவே நடித்து
முடித்துவிட்டார் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த நிலையில் ஒரு அடார் லவ் திரைப்படம்
விரைவில் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நாயகி பிரியா பிரகாஷ் வாரியரின் உதட்டை முத்தமிடுவதோடு மட்டும் அல்லாமல் கடித்து இழுப்பது போல் நாயகன் ரோசன் ஆன்ட்ரூஸ் நடித்துள்ளார். மிகவும் துணிச்சலான காட்சியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பிரியா ஈர்த்துள்ளார்.
அந்த முத்தக்காட்சி வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்