நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக நிச்சயம் மாறும்..! ரஜினிகாந்த் திட்டவட்டம்..!

அரசியலில் நான் போட்ட புள்ளி தேர்தல் நெருங்க நெருங்க சுனாமியாக மாறும் என ரஜினிகாந்த் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


சென்னையில் நேற்று இரவு ரங்கராஜ் பாண்டேவின் யூடியூப் சேனலான சாணக்கியா சேனலின் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்கள் மற்றும் பல யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த நபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இவர் பேசிய இந்த வார்த்தைகள் மிகப்பெரிய அதிர்வலைகளையும் தாக்கத்தையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை குறித்து பல தகவல்களையும் திட்டங்களையும் தனது தொண்டர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார். 

அதனைக் குறிப்பிட்டு விழாவில் பங்கேற்ற பொழுது நடிகர் ரஜினிகாந்த் புதிய கருத்தை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் அரசியலில் நான் போட்ட புள்ளி தற்போது சூழலாக மாறத் தொடங்கியுள்ளது. அதனை யாராலும் தடுக்க முடியாது தேர்தல் நெருங்க நெருங்க அது தானாக சுனாமியாக உருவெடுக்கும் என கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.