ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவர்கள் ரகசிய சிகிச்சை!

உடல்நல குறைவு


நடிகர் ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவர்கள் ரகசியமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்

பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி மக்கள் மன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். தினந்தோறும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு மாவட்டவாரியாக மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து ரஜினியே நேரடியாக விசாரித்தும் வந்தார். அதுமட்டும் இன்றி பேட்ட படத்தின் டப்பிங் பணிகளையும் கூட ரஜினி நிறைவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

   இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் மராட்டிய மாநிலம் மந்த்ராலயம் சென்று ரஜினி தியானம் செய்துவிட்டு திரும்பினார். வருடத்திற்கு ஒரு முறை மந்த்ராலயம் செல்வது ரஜினியின் வழக்கம். இதன் அடிப்படையிலேயே கடந்த வாரம் அவர் அங்கு சென்று திரும்பினார். ஆனால் சென்னை திரும்பியதில் இருந்தே ரஜினிக்கு உடல் நிலை சரியில்லை.

   மருத்துவர்களின் பரிசோதனையில் ரஜினிக்கு ஒவ்வாமை மற்றும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த ரஜினிக்கு நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ரஜினி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல மருத்துவமனையில் மருத்துவர்கள் ரஜினி வீட்டுக்கு ரகசியமாக வந்து சிகிச்சை அளித்து செல்கின்றனர்.

   சிகிச்சை முடிந்து ரஜினி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது- இதனால் தான் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த நிகழ்வில் ரஜினி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நாளை ரஜினியின் மனைவி லதா ஏற்பாடு செய்துள்ள குழந்தைகளுக்கான நிகழ்வில் கூட ரஜினி கலந்து கொள்ளமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.