3385 துப்புரவு பணியாளர்கள் வங்கி கணக்குகளில் ரூ.25 லட்சம் செலுத்திய ராகவா லாரன்ஸ்..! அதற்கு அவர் சொன்ன காரணம்!

ஏற்கனவே சொன்ன மாதிரி நடிகர் ராகவா லாரன்ஸ் 3385 துப்புரவு பணியாளர்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 25 லட்சம் பணத்தை நேரடியாக செலுத்தி அவர்களுக்கு உதவி செய்து இருக்கும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால் உலகெங்கும் உள்ள பலரும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று தான் நம்முடைய தமிழகத்திலும் பலரும் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து திரைப் பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற தொகையை பொது மக்களுக்கு அளித்து வருகின்றனர். 

அதில் பெரும் பங்காற்றும் நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய்.50 லட்சமும் பிரதமர் மோடி நிவாரண நிதிக்கு ரூபாய்.50 லட்சமும் செலுத்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தூய்மை பணியாளர்களுக்கும் தன்னால் இயன்ற தொகையை நிச்சயம் செலுத்துவேன் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் கூறிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். அதாவது ராகவா லாரன்ஸ், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அந்தத் திரைப்படத்திற்காக தான் பெரும் சம்பளத்திலிருந்து 25 லட்சம் ரூபாயை , 3385 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூபாய் 750 பணத்தை அவர்களது நேரடி வங்கி கணக்கில் செலுத்தி உள்ளாராம். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருக்கிறார். 

இதனைப் பார்த்த அவரது நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்து பலரும் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்தும் அவரை பாராட்டியும் வருகின்றனர்.