எனது குழந்தைகள் கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டனர்..! மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட தகவல்!

ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ட்ரஸ்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 13 குழந்தைகளுக்கு தற்போது கொரோனா தொற்று நெகட்டிவ் என்று சோதனை முடிவு வந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்களுடைய ஆசிரமத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளனர்.


நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் சென்னை அசோக் நகரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வசித்து வருபவர்களில் 18 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 13 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்ற சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஏற்கனவே தங்கியிருந்த ஆசிரமத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

இந்த சந்தோசமான விஷயத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என்னுடைய குழந்தைகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தற்போது பாதுகாப்பாக உள்ளனர். இந்த விஷயம் தனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். மேலும் குழந்தைகளின் உடல் நலத்திற்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தக்க சமயத்தில் உதவி புரிந்த அதிகாரிகள் என பலருக்கும் அவர் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். 

இந்த பதிவை அவர் தனது ஆசிரமத்தில் வளர்ந்து வரும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டிருக்கிறார். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த சம்பவம் உயிரைப் பறிக்கக் கூடிய கொடிய தொற்றிலிருந்து அனைவராலும் எளிதில் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.