நயன்தாராவை படுக்கைக்கு அழைத்த விவகாரம்! ராதாரவிக்கு மு க ஸ்டாலின் கொடுத்த செம பரிசு!

நயன்தாராவை பார்த்தால் கூப்பிட தோன்றுகிறது என்று கூறிய ராதாரவிக்கு சரியான பரிசு கொடுத்து அசத்தியுள்ளார் ஸ்டாலின்.


சென்னையில் கொலையுதிர் காலம் எனும் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்பெல்லாம் கடவுள் வேடங்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என்பது போல் தோன்றும் என ராதா ரவி தெரிவித்தார்.

தற்போதும் கூட நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார் என்று ராதாரவி குறிப்பிட்டார். நயன்தாரா நல்ல நடிகைதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. முன்பெல்லாம் சாமியாக நடிக்கும் நடிகைகளை பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என்பது போல் இருக்கும்.

ஆனால் தற்போது சாமியாக நடிக்கும் நடிகைகளை பார்த்தால் கூப்பிட வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. நான் தவறாக ஒன்றும் சொல்லவில்லை தற்போது இருக்கும் நிலையை தான் கூறுகிறேன். இவ்வாறு ராதாரவி பேசியிருந்தார்.

சாமியாக நடிக்கும் நடிகைகளை பார்த்தால் கூப்பிட வேண்டும் என்று இருப்பதாக ராதாரவி கூறியது நயன்தாராவை தான் என்று சர்ச்சை எழுந்தது. இதற்கு நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

திமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ள ராதாரவி இப்படி பேசியது அந்தக் கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது. இதனை எடுத்து ராதாரவியை திமுகவிலிருந்து நீக்கி மு க ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். இது நயன்தாராவை படுக்கைக்கு அழைத்த ராதாரவிக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு என்று பேசிக்கொள்கிறார்கள்.