ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் மாலையும் கையுமாக தனுஷ் மனைவியுடன் நடிகர் பிரசன்னா! வைரலாகும் புகைப்படம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடிகர் பிரசன்னாவும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் வழிபாடு நடத்தினர்.


நடிகர் தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில்  நடிகர் பிரசன்னாவின் மனைவி சினேகாவும் நடிக்கிறார்.

தற்போது மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி அங்கு சென்ற நடிகர் பிரசன்னா, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் பின்னர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சென்றனர்.

அவர்கள் இருவரையும் கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். வழிபாடு மேற்கொண்ட  அவர்களுக்கு சிறப்பு மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் கோவிலில் உள்ள அனைத்து உப தெய்வங்களையும் அவர்கள் வணங்கினர். கோவில் பூசாரிகள் அவர்களுக்கு கோவிலைச் சுற்றிக் காண்பித்தனர். பின்னர் ஆண்டாள் கோயிலில் இருந்த யானைக்கு பிரசன்னாவும் ஐஸ்வர்யாவும் பழங்களை கொடுத்தனர்.