காதல்! கல்யாணம்! 3 குழந்தைகள்! ஆனாலும் சீதாவை பிரிய அந்த ஒன்று தான் காரணம்! பார்த்திபன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடிகர் பார்த்திபன் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டு சீதாவைப் பிரிந்ததற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.


நடிகை சீதா ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். புதியபாதை திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனும் சீதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து சீதா அவர்களது வீட்டின் சம்மதத்தைப் பெறாமல் அவர்களது எதிர்ப்பையும் மீறி பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக சமரசமாக சட்டப்படி விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரின் பிரிவை பற்றி நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார் . அப்போது பேசிய அவர் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தை விட காதல் திருமணத்தில் சென்டிமென்ட் அதிகமாகவே உள்ளது என்று கூறினார். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி செல்லாது . சிறு சிறு சண்டைகள் மூலம் முறிவுகள் ஏற்படும். அது இறுதியில் பிரிவாகவும் மாறும். இந்த பிரிதலும் காதலில் ஒரு இணைவது போன்று தான் என்று கூறினார் நடிகர் பார்த்திபன்.

மேலும் பேசிய அவர் எந்த ஒரு நபரும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் சகித்துக் கொண்டு வாழ்க்கையில் வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடைய வாழ்க்கை ஒரு முறைதான் அதே மாதிரி அந்த பெண்ணுக்கும் வாழ்க்கை ஒருமுறைதான் என்று கருத்தில் கொண்டுதான் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். வருடங்களுக்கு இடையில் ஒன்றாக வாழ்வதை விட பிரிந்து சந்தோஷமாக வாழலாம் . நாங்கள் பிரிந்து இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் . மேலும் எங்களுடைய குழந்தைகளுக்கான எல்லா விஷயத்திலும் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தான் செயல்படுகிறோம் என்றும் நடிகர் பார்த்திபன் கூறினார்.