உயிரிழந்து 12 வருடங்கள் கடந்தது..! நடிகர் பாண்டியனை இப்போதும் நினைவில் வைத்து நெகிழ வைத்த அவர்கள்..! யார், எப்படி தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பாண்டியனின் 12 ஆவது நினைவுதினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது


நடிகர் பாண்டியன் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 15 வயதில் ரகு என்ற ஒரு மகனும் இருக்கிறார். நடிகர் பாண்டியன் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 

அதிலும் புதுமைப்பெண் நாடோடிகள் , ஆண் பாவம் , கிழக்கு சீமையிலே, அஜித்துடன் இணைந்து நடித்த சிட்டிசன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு சிறந்த படங்களாக அமைந்தன. நடிகர் பாண்டியன் சினிமா படவாய்ப்பு குறைய தொடங்கிய உடன் சின்னத்திரையிலும் நடிக்க துவங்கினார் . அதுமட்டுமில்லாமல் அண்ணா திராவிடர் கழகத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் சிறிது காலத்திலேயே அவர் நோய்வாய்ப்பட்டார். இதற்காக பல சிகிச்சைகளில் எடுத்துக் கொண்டார். உடல்நிலை சரியில்லாத நடிகர் பாண்டியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 10 2008 தேதியில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவருடைய நினைவு தினமானது நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினரும் ரசிகர்களும் அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்பது. அவர் உயிரிழந்த 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்காமல் அவருடைய லாட்ஜில் பணியாற்றும் ஊழியர்கள் போஸ்டர் அடித்து தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.