கணவனின் நெருங்கிய ஆண் நண்பருடன் உறவு..! அம்பலமான டாப் மோஸ்ட் நடிகரின் மனைவியின் அந்தரங்கம்!

நவாசுதீன் சித்திக்கின் இரண்டாவது மனைவி ஆலியா தன்னுடைய கணவரின் நெருங்கிய நண்பருடன் தொடர்பில் இருப்பதால் கணவருடனான உறவை முறித்துக்கொள்ள விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது இரண்டாவது மனைவியான ஆலியா தற்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நடிகர் நவாசுதின் ஏற்கனவே ஷீபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஆலியாவை காதலித்து இரண்டாவதாக கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டே இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இருவரும் மனம் திறந்து பேசி சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆனால் தற்போது திடீரென்று இவர்களது குடும்ப வாழ்க்கை விவாகரத்தை நோக்கி சென்றுள்ளது. இதனை அடுத்து ஆலியா தன்னுடைய விவாகரத்து நோட்டீசை வழக்கறிஞர் மூலமாக கடந்த 7ஆம் தேதி இமெயில் மற்றும் வாட்ஸ்அப் வழியாக நவாசுதீன் சித்திக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு நடிகர் நவாசுதீன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லையாம்.

அதாவது இதுவரை தனது கணவர் நவாசுதீன் தன்னை அடிப்பதற்காக கை ஓங்கியது கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அண்ணன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவரை நான் அவரிடமிருந்து பெறாதது அது மட்டும் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவரது தாயும் சகோதர சகோதரிகளும் எங்களுடன் மும்பையில் தங்கியிருந்தார்கள்.

என்னை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து துன்புறுத்தி வந்தனர். பல ஆண்டு காலமாக இதனை மறைத்து அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தேன். இதே காரணத்துக்காகத்தான் நவாசுதினின் முதல் மனைவியும் அவரை விட்டு பிரிந்தார் என்று அவர் கூறியிருக்கிறார். நடிகர் நவாசுதின் மனைவி ஆலியா எதற்காகத் தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது பல தகவல்கள் இணையத்தில் உலாவர ஆரம்பித்துள்ளன. 

அதாவது ஆலியா தன்னுடைய நிஜ பெயரான அஞ்சனா கிஷோர் பாண்டே என்ற பெயரை மீண்டும் வைத்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் தன் கணவரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான பியூஷ் பாண்டே உடன் நெருங்கி பழகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலியாவின் வாட்ஸ்அப் புகைப்படங்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இதையறிந்த நெட்டிசன்கள் பலரும் புதிய காதலுக்காக தான் கணவரை விவாகரத்து செய்ய உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.