பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் இளைய சகோதரன் தனக்கு பாலியல் அச்சுறுத்தல் அளித்ததாக பெண் ஒருவர் தனது சித்தப்பாவின் மீது புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தப்பா என்னை அப்படி செய்தார்! அதை பெரியப்பா கண்டுகொள்ளவில்லை! பிரபல நடிகர் அண்ணன் மகளுக்கு நடந்த கொடுமை!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக் தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். சமீப காலமாகவே நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது மனைவி ஆலயா ஆகியோரது விவாகரத்து பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நவாசுதீன் இளைய சகோதரன் மினாசுதீன் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகார் அளித்த அந்தப் பெண் முதல் முறையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பொழுது அவர் மைனராக இருந்துள்ளார். மினாசுதீன் சாச்சு (சித்தப்பா) என்னுடன் வித்தியாசமாக நடந்து கொள்ளத் தொடங்கியபோது எனக்கு ஒன்பது வயது. அப்போது என்னை மீனா சுதின் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். ஆனால் அந்த வயதில் அது ஒருவிதமான பாலியல் துஷ்பிரயோகம் என்பது எனக்கு தெரியாது. இது குறித்து முதலில் நான் என் தந்தையிடம் கூறினேன். பின்னர் என்னுடைய பெரியப்பா நவாசுதீன் இடமும் கூறினேன் ஆனால் அவர் என்னை நம்ப மறுத்து விட்டார். பின்னர் நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன்.
இந்நிலையில் ஆலியா சாச்சி வீட்டில் தனக்கு பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக கூறி இருந்தார். அதனை வைத்து பார்க்கும் பொழுதுதான் நான் தவறு செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து ஆலியாவிடம் சென்று எனக்கு நேர்ந்த அனைத்தையும் கூறினேன். அப்போது அவர் இது உனக்கு எதிராக செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் என்று கூறினார். மேலும் என்னை இதற்கு எதிராக நீ தைரியமாக நின்று செயல்பட வேண்டும் எனவும் கூறினார். ஆகையால் நான் நீதி கிடைக்க வேண்டும் என்று போராட போகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.