பிரகாஷ் காரத், கெஜ்ரிவாலுடன் சந்திப்பு! கமலை நம்பி டெல்லியில் தயாராகும் அரசியல் தற்கொலைப் படை!

டெல்லிக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்ற கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்த நிகழ்வு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.


தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் சேர்ந்துகொள்ள முடியாத கமல்ஹாசன், தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினரின் வயிற்றெரிச்சலை சம்பாதிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார்.

அரசியல் விவகாரம் குறித்து பிரகாஷ் காரத்திடம் பேசினோம் என்று கமல் கூறியிருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் உடனடியாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் எடுத்துக்கூறியுள்ளார்.

தேசிய அளவில் உள்ளவர்களுக்கு கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களை சந்திக்கக்கூடாது என்பது தெரியாது, அதனால் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக எண்ணவேண்டாம். நாங்கள் இன்னமும் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்களாம்.

இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசினார் கமல். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரையும் சந்தித்துப் பேச இருக்கிறாராம். ஏதேனும் வகையில் தன்னை வெறுப்பேற்றும் தி.மு.க.வுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் கமலின் எண்ணமாம்.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர இருக்கும் கமல்ஹாசன் அடுத்தபடியாக நேர்மையின் உருவமான இந்திய ஜனநாயக் கட்சி தலைவர் பச்சமுத்துவுடன் கூட்டு சேர்கிறார். ஆக, தமிழகத்தில் நான்காவது அணி ஒன்று தற்கொலைப் படையாகத் தயாராகிறது.