மத்திய அரசை விமர்சித்த நடிகர் ரஜினிக்கு சபாஷ் கூறி ட்விட் போட்ட கமல்!

கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்து தனது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து அதனை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக டெல்லியில் போராட்டம் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் மீது வன்முறை தாக்குதல் நிகழ்ந்தது . இதனால் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இஸ்லாமியர்களின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் புனிதத் தலங்களிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது வேதனை அளிக்கிறது. இந்த செய்தியை அறிந்து கொண்ட ரஜினிகாந்த் நேற்று இரவு திடீரென்று செய்தியாளர்களை சந்தித்து இந்த சம்பவத்தைக் குறித்து தன்னுடைய கருத்தை கூறினார்.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென நேற்று இரவுசெய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

ரஜினி எப்பொழுதும் பாஜகவிற்கு ஆதரவாக பேசக்கூடியவர் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது அரசுக்கு எதிராக பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த கருத்திற்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஆதரவாக தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் பதிவிட்ட அந்த டுவிட்டர் பதிவில் "சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்" என கூறியிருக்கிறார்.