தமிழனா இருந்தா மட்டும் போதாது! திறமை இருக்கனும்! சீமானுக்கு கமல் வைத்த சூடு!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகளிர் தின விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கலந்துக்கொண்டார்.


விழா மேடையில் நடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மகளிர் தின ஒளி ஏற்றிய பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மேடையில் பேசினார்:

 ஒழுக்கமும் கல்வியும் தாய் வழியில் தான் வரும்.

அரசியல் வாதிகள் ஏழ்மையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்...ஏனெனில் அதில் தான் அவர்கள் வெற்றி இருக்கிறது.

ஒரு நாள் விருந்து சாப்பிட்டு விட்டு 365 நாள் பட்டிணி இருக்கும் விளையாட்டு எங்களுக்கு பிடிக்காது .

ஏழை, பணக்காரன் வித்தியாசம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவது நம் கடமை .

 பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஒளிக்க வேண்டும் அதை மரியாதையாக அனைவரும் பார்க்க வேண்டும்.

எனக்குப்பின் என் மகள் என்ற அடிப்படையில் வாரிசு அரசியல் கூடாது.

தமிழன் என்று வாய்ப்பு கேட்க கூடாது, என் தகுதி இது என்று கூறி வாய்ப்பு கேட்க வேண்டும்.

தமிழன் என்பது விலாசம். அதனை வைத்து வாய்ப்பு கேட்க கூடாது. திறமையையும், தகுதியையும் வைத்து வாய்ப்புக்களை பெற வேண்டும்.