10 கோடி ரூபாயை திருப்பி தரமாட்றார்..! பிக்பாஸ் கமல் மீது சூர்யா உறவினர் திடுக் புகார்!

பிரபல தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கமல்ஹாசன் எதிராக புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.


கடந்த 2015ஆம் ஆண்டு உத்தமவில்லன் திரைப்படத்தின் போது நிதி பற்றாக்குறையின் காரணமாக திரையிட முடியாமல் கமலஹாசன் மற்றும் இயக்குனர் லிங்குசாமி தவித்து வந்துள்ளனர். நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் அடுத்த திரைப்படத்தில் நான் நடித்து தருவதாக கூறி 10 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிவற்ற நிலையிலும் இதுவரை நடிகர் கமலஹாசன், ஞானவேல்ராஜாவிற்கு கால்ஷீட் தரவில்லை. கால்ஷீட் தரவில்லை என்றால் நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று ஞானவேல்ராஜா கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார்.

 பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கமலஹாசன், ஒன்று என்னுடைய திரைப்படத்தில் நடித்து தரவேண்டும் அப்படி இல்லை என்றால் என்னுடைய 10 கோடி ரூபாயை திருப்பி தர வேண்டும் . இந்த இரண்டில் ஏதாவது ஒன்று எனக்கு நடத்தித் தர வேண்டும் என்று புகார் கூறியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.