நடிகர் ஜெய் , நடிகை அதுல்யா ரவி அவர்களுடன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.
மீண்டும் அந்த நடிகருடன் இணையும் இளம் நடிகை!

நடிகர் ஜெய் தமிழ் , மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் ஒரு பிரபல நடிகர் ஆவார். இவர் கடைசியாக நீயா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நடிகர் ஜெய் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . மேலும் இவரிடம் இன்னும் நடிப்பதற்கு பைப் லைனில் புதிய படங்கள் காத்திருக்கின்றது.
மலையாளத்தில் நடிகர் ஜெயின் நடிப்பில் மதுரை ராஜா எனும் திரைப்படம் வெளிவந்தது இந்த திரைப்படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகரான மம்முட்டி அவர்களும் நடித்திருந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிகர் ஜெய் கமிட் ஆகி உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
மேலும் நடிகர் ஜெய் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் . இந்த திரைப்படத்தில் நடிகை அதுல்யா ரவி ஜோடியாக நடிக்க உள்ளார் . இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன் நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நடிகர் ஜெய் அவர்கள் நடிகை அதுல்யா உடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது வாய்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.