என் பப்பு..! மகாலட்சுமியை கொஞ்சித் தள்ளும் ஈஸ்வர்! ஆதாரத்தை வெளியிட்ட மனைவி ஜெயஸ்ரீ.!

சின்னத்திரை நடிகர் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு தகவலை கூறி வருகிறார்.


சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றும் ஜெய்ஸ்ரீ ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்ததால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

கடைசியில் ஈஸ்வரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமை செய்வதாக கூறி ஜெயஸ்ரீ அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் ஈஸ்வரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதனை அடுத்து சிறையிலிருந்து வெளிவந்த ஈஸ்வர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் மனைவியை பற்றிய பரபரப்பு தகவல்களை கூறினார். மேலும் தனக்கும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி வருவது முற்றிலும் பொய் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெய்ஸ்ரீ மகாலட்சுமி இருக்கும் தன்னுடைய கணவர் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது உறுதி என்று கூறும் வகையில் ஆதாரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதாவது ஈஸ்வரும் மகாலட்சுமியும் இணைந்து பேஸ்புக்கில் சாட் செய்யும் புகைப்படங்களை ஜெய்ஸ்ரீ தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் மகாலட்சுமியை நடிகர் ஈஸ்வர், " பப்பு" என்று செல்லமாக அழைத்து உள்ளார். இதன்மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பது உறுதியாகிறது என ஜெயஸ்ரீ கூறிவருகிறார்.

தற்போது ஈஸ்வரும் மகாலட்சுமியும் சாட் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.