என் மனைவிக்கும் மகாலட்சுமி கணவனுக்கும்..! சிறையில் இருந்து ரிலீஸ் ஆன ஈஸ்வர் வெளியிட்ட பகீர் தகவல்!

சின்னத்திரை நடிகர் ஈஸ்வருக்கும் அவரது மனைவி ஜெய்ஸ்ரீக்கும் இடையே ஏற்பட்டு வரும் பிரச்சனை சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


கடந்த சில நாட்களாகவே ஈஸ்வருக்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கு இருந்து வந்த குடும்ப பிரச்சனை தற்போது வெளியே விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ஜெயஸ்ரீ தன்னுடைய கணவர் ஈஸ்வர் குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன் மகள் மீது தவறான எண்ணத்தில் பழகுவதாகும் அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களாக சிறையில் இருந்த ஈஸ்வர் இன்றையதினம் விடுதலையாகி செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த போது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர் தனக்கும் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துவரும் மகாலட்சுமிக்கும் தவறான உறவு இருப்பதாக தன்னுடைய மனைவி கூறியது முற்றிலும் பொய் என்று கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரும் தன்னுடைய மனைவி ஜெய்ஸ்ரீ இடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ மகாலட்சுமியின் கணவரிடம் தொடர்புகொண்டு இருவரும் இணைந்து தன்னையும் மகாலட்சுமியையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்று எண்ணி இவ்வாறு தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர் என்று நடிகர் ஈஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர் நடிகை ஜெயஸ்ரீ, " என் மீது கூறப்படும் அனைத்து குற்றங்களும் பொய்யானவை என்று என்னால் நிரூபிக்க இயலும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். நடிகை மகாலட்சுமியின் கணவருடன் ஒன்றாக இணைந்து நடிகை ஜெயஸ்ரீ குடித்திருக்கிறார் அவ்வாறு குடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவும் தன்னிடம் இருப்பதாக ஈஸ்வர் கூறி வருகிறார்..

எனவே என் மனைவிக்கும் மகாலட்சுமி கணவருக்கும் இடையே தவறான உறவு இருக்கலாம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவராலும் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை கூட நடிகை ஜெய ஸ்ரீ மகாலட்சுமியின் கணவருடன் இணைந்து கொண்டாடினார் என்று ஈஸ்வர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ஈஸ்வர் கூறிய குற்றச்சாட்டை வைத்து பார்க்கும் பொழுது ஜெயஸ்ரீயும் நடிகை மகாலட்சுமியின் கணவரும் இணைந்து ஈஸ்வரையும் மகாலட்சுமியையும் கார்னர் செய்வதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.