ஏற்கனவே திருமணமாகி குழந்தையோடு இருந்தவள் என் மனைவி! நடிகர் ஈஸ்வர் வெளியிட்ட பகீர் தகவல்!

சின்னத்திரை நடிகரான ஈஸ்வருக்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையே ஏற்பட்டுள்ள குடும்பத்தகராறு தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.


ஜெயஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் ஈஸ்வரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியான ஈஸ்வர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஈஸ்வர் மற்றும் ஜெய்ஸ்ரீ ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் ஈஸ்வருக்கு முதல் திருமணம் ஆகும். ஆனால் ஜெயஸ்ரீக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறாள்.

ஜெய் ஸ்ரீ திருமணம் செய்து கொண்ட பின்பு ஜெயஸ்ரீயின் மகளையும் தன் மகளைப் போல் பாவித்து ஈஸ்வர் வளர்த்து வந்ததாகவும் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். 

ஜெயஸ்ரீயின் குழந்தைக்கு தேவையான எல்லாவற்றையும் நான் தான் செய்தேன். அந்த குழந்தை என் மீது மிகவும் அன்பு காட்டியது. அதேபோல் நானும் அந்த குழந்தையின் மீது அன்பு செலுத்தினேன் . அதுமட்டுமில்லாமல் எங்களது குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று ஈஸ்வர் கூறினார்.

கடந்த சில மாதங்களாகவே எங்கள் இருவருக்கும் இடையில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டது . எங்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. 

ஆகையால் ஜெயஸ்ரீ தான் நாம் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று முதலில் முடிவெடுத்தார். பின்னர் நானும் ஜெயஸ்ரீ முடிவை ஒப்புக்கொண்டேன். 

ஆனால் என் மனைவி ஜெயஸ்ரீ எதற்காக என் மீது பல பழிகளை சுமத்துகிறார் என்று எனக்கு புரியவில்லை என்றும் அவர் கூறினார். நான் இதுவரை என் மனைவியை அடித்தது கிடையாது.

எங்களுக்கு திருமணம் ஆகும் பொழுது என் நண்பர்கள் பலரும் ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொள்ளாதே என்று கூறினர் இருப்பினும் அவள் மீது நான் வைத்த காதலும் அன்பும் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ள வைத்தது. 

திருமணம் முடிந்தவுடன் என் அப்பா தன் சொந்த உழைப்பில் சம்பாதித்த அபார்ட்மென்ட் ஒன்றில் குடியேறினோம். நாங்கள் அந்த அப்பார்ட்மெண்டில் கீழ்தளத்தில் இருந்தோம். என் பெற்றோர் அதே அபார்ட்மெண்டில் ஏழாவது தளத்தில் குடியிருந்தனர்.

தற்போது நிலவி வரும் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமே அவள் வைத்திருந்த கிரெடிட் கார்ட் பணத்தை நான் கட்டவில்லை என்பது தான். ஒரு குறிப்பிட்ட தொகையை என்னை கட்ட சொன்னார், அந்த நேரத்தில் என்னுடைய மார்க்சீட் அனைத்தையும் ஜெய்ஸ்ரி எடுத்து மறைத்து வைத்திருந்தார்.

ஆகையால் நான் அந்த மார்க்சீடை என் கண்ணில் காட்டு அல்லது என்னிடம் கொடுத்துவிடு, நான் உனக்கு தேவையான பணத்தை கொடுக்கிறேன் . அதே சமயத்தில் மார்க்சீட் கொடுக்கும் பொழுது என் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொள்கிறேன் என்று கூறினேன்.

ஆனால் அவளோ அதை கொடுக்க மறுத்தாள். இதனை அடுத்து என் அப்பா அம்மாவிடம் சென்று நான் அவளுக்கு ரூபாய் . 1 லட்சம் கடனாக திருப்பி தர வேண்டும் என்று கூறினார்.

பின்னர் சில தினங்கள் கழித்து போலீசாரிடம் சென்று ரூபாய் . 8 லட்சம் நான் தரவேண்டும் என்று கூறினார். பின்னர் அதிரடியாக 8 லட்சத்திலிருந்து நான் ரூபாய். 30 லட்சத்தை கடனாக திரும்பத் தரவேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார்.

உடனே போலீசார் என்னை கைது செய்து விசாரணை செய்தனர் . 30 லட்சம் ரூபாயை என்னை திரும்ப தருமாறு கூறினார். இல்லையேல் என்னை அனுப்ப முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

அதன்பின்னர் என்னை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விசாரணை செய்தனர். மேலும் என் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நான் சிறையில் இருந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஜெயஸ்ரீ, எனக்கும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு உள்ளதாகவும் தகவல் பரப்பி வருகிறார்.

நானும் மகாலட்சுமியும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவதையை கண்டேன் என்றும் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறோம் .அந்த சீரியலில் நடிப்பதன் மூலம் எங்களுக்கு மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எங்களிருவரையும் நடனமாடும்படி கூறினர். ஆகையால் நாங்கள் இருவரும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடினோம்.

மேலும் அவர்கள் அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை என்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் பகிரும் படி கூறினர். நான் அவர்கள் சொன்ன அதன்படியே என்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் நிகழ்ச்சியை இன் புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்தேன்.

இவற்றை அனைத்தையும் பார்த்த என் மனைவி என்னையும் மஹாலக்ஷ்மியும் சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் மலேசியாவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக என் பாஸ்போர்ட்டையும் எடுத்து என் மனைவி ஜெயஸ்ரீ ஒளித்து வைத்துவிட்டார்.

பின்னர் நான் அவளிடம் கேட்ட போதும் அவர் எனக்கு திருப்பித் தராததால் புதிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நான் மலேசியாவிற்கு சென்று வந்தேன். 

என் மனைவி இத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு பின்னணியில் யாரோ ஒருவர் இருக்கிறார்…. ஏன்? லட்சுமியின் கணவராக கூட இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன் என்று ஈஸ்வர் பத்திரிகையாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.