75 வயதில் 2வது திருமணம் செய்த நடிகர்..! மறுநாள் காலையில் ஹாஸ்பிடலில் அட்மிட்! 49 வயது மனைவியுடன் இரவு நடந்தது என்ன?

75 வயதாகும் பிரபல சீனியர் நடிகர் ஒருவர் திருமணமான மறுநாளே மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் திபாங்கர் டே. இவர் வங்காள மொழியில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் நடிகை டோலான் ராய் என்பவருடன் லிவிங் டுகெதர் உறவுமுறையில் பல ஆண்டுகள் இருந்து வந்தார். 

தற்போது 75 வயதாகும் இந்த நடிகர் கடந்த 16 ஆம் தேதி அன்று நடிகை டோலான் ராய்யை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிக கோலாகலமாகவும் சிறப்பாகும் நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர்களது திருமணத்தை மேற்கு வங்கத்தை சேர்ந்த பலரும் பிரபலமாக பேசி வந்தனர்.

இன்னிலையில் நடிகர் திபாங்கர் டே , திருமணமான மறு நாளான நேற்றைய தினம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திபாங்கரின் உடல்நிலை சரியில்லாததை அடுத்து அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.