அண்ணன் மனைவி கீதாஞ்சலிக்கு நடிகர் தனுஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் ஆவார்.


நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் நல்ல கலெக்ஷனை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதாவது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையிடப்படும் என்று படக்குழுவினர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணிக்கு அளித்த பரிசு பொருள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் தனுஷ் தன் அண்ணன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனுக்கு புதியதாக இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார்.  

அதாவது "தி ஹன்டிங் பார்ட்டி " மற்றும் "சைலன்ஸ் ஆப் தி கேல்ஸ்" ஆகிய இரு புத்தகங்களையும் தனுஷ் கீதாஞ்சலிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனை அஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக எடுத்து நடிகர் தனுஷுக்கு இந்த அழகிய பரிசுக்காக நன்றி தெரிவித்துள்ளார்.

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்டுள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.