மஞ்சு முதல் சினேகா வரை! ஜோடி போட நடுத்தர வயது ஹீரோயின்களை தேடும் தனுஷ்!

நடிகர் தனுஷ் அண்மைக்காலமாக தன்னை விட வயதில் மூத்த நடிகைகளை தனக்கு ஜோடியாக்கி வருகிறார்.


தனுஷ்க்கு எப்போதுமே தன்னை விட வயதில் மூத்த பெண்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு போல. அதனால் தான் அவர் தன்னை விட வயதில் மூத்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

அதுமட்டும் அல்ல தனது படத்திலும் நடுத்தர வயதுடைய ஹீரோயின்கள் அல்லது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக்க முடியவில்லை என்றாலும் கூட படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆரம்பித்தார்.

பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தில் அர்ச்சனாவை நடிக்க வைத்தார். இவர் நீங்கள் கேட்டவை எனும் படத்தில் வரும் ஓ வசந்த ராஜா பாடலின் மூலம் பிரபலம் ஆனவர். இதன் பிறகு மாப்பிள்ளை படத்தில் தனக்கு மாமியாராக மனீசா கொய்ராலாவை நடிக்க வைத்திருப்பார்.

அண்மையில் கூட வேலையில்லா பட்டதாரி படத்தில் தன்னை விட வயதில் மூத்தவரான கஜோலை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்திருப்பார். தற்போது ஒரு பட மேலே போய் தன்னை விட வயதில் மூத்த நடிகைகளை தனக்கு ஜோடியாக்கி வருகிறார் தனுஷ்.

அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக விளங்கும் மஞ்சு வாரியரை தனது அசுரன் படத்தின் கதாநாயகியாக்கியுள்ளார். மஞ்சுவாரியருக்கும் தனுசுக்கான வயது இடைவெளி 5 வயதாகும். இதே போல் தற்போது தனது அடுத்த படத்தில் சினேகாவை ஜோடியாக்கியுள்ளார்.

சினேகாவும் தனுசை விட இரண்டு வயது சீனியர் தான். இப்படி நடுத்தர வயது நாயகிகளை தேடிப் போகும் தனுசை நினைத்து இளம் நாயகிகள் கடும் கோபத்தில் உள்ளனராம்.