அனாதைகளாக 700 பேர் ரோட்டில் திரிந்தோம்! விஜய் தான் எங்களை வாழவைத்தார்..! நெகிழும் வில்லன் நடிகர் தீனா!

நடிகர் விஜயின் திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் தீனா.


இவர் நடிகர் விஜய்யால் அவருக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்து சமீபத்தில் அவர் பங்கேற்ற பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நடிகர் விஜய் எனக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு பலவிதமான நன்மைகளைச் செய்துள்ளார்.

அவர் செய்ததை பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால் ஒரு நாள் கூட போதாது என்று கூறினார். நடிகர் விஜய் செய்த பல நல்ல விஷயங்களில் எடுத்துக்காட்டாக ஒரு சில விஷயத்தை நடிகர் தீனா அந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அப்போது 700 பேர் அடங்கிய குழு ஒன்றை தீனா அவர்கள் நடத்தி வந்திருக்கிறார்.

அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் , ஆர்கே செல்வமணி ஆகியோர் உடன் இணைந்து அந்த 700 பேரை தற்போது பெப்சி (FEFSI) அமைப்புடன் இணைத்துள்ளார் . இதன் மூலம் அந்த 700 ஜிம் பாய்ஸ்கும் ஒரு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று கூறுகிறார் தீனா.

இந்த அமைப்பில் இவர்கள் இணைந்து மூலமாக இவர்களுக்கு ஏதாவது விபரீதமாக விபத்து ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினையில் சிக்கி கொண்டாலோ இந்த அமைப்பின் மூலம் இவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும். இதன் மூலம் அவர்களது குடும்பத்தாரும் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் தீனா.

யாரும் இல்லாமல் அனாதையாக கிடந்த எங்களுக்கு ஒரு ஒளி விளக்காய் திகழ்ந்தவர் நடிகர் விஜய் அண்ணா என்று மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார் நடிகர் தீனா என்பது குறிப்பிடத்தக்கது.