வெளி உலக வெளிச்சமே இல்லாமல் வளர்ந்த ராகவா லாரன்ஸ் மகள்..! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..!

பிரபல நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸின் அன்பு மகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


ரகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் அற்புதம் என்ற திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். பின்னர் முனி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அதுமட்டுமில்லாமல் அதே கதை தொடர்பான பாகங்களிலும் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இவர் நல்ல நடிகர் என்பதை போலவே மிகப்பெரிய நடன இயக்குனர் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழ்சினிமாவில் நடன இயக்குனர் பிரபுதேவாவைப்போல் இன்னொருவர் இருக்கிறார் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான். ரகவா லாரன்ஸ் சினிமாவைத் தவிர பல நற்பணிகளும் தன்னுடைய வாழ்வில் செய்து வருகிறார்.

அதாவது உடல் ஊனமுற்ற குழந்தைகளையும் யாரும் இல்லாமல் கைவிடப் பட்டவர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு தேவையான அரவணைப்பையும் வழங்கி எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். இதற்காக தன்னுடைய வாழ்வில் தான் சம்பாதிக்கும் பணத்தை ஒதுக்கி அந்த டிரஸ்ட்டை முறையாக நடத்தி வருகிறார். தற்போது கூட கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கும் நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 3 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார்.

தமிழ்சினிமாவில் இவ்வளவு பெரிய தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியது ராகவாலாரன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் பற்றி நமக்கு தெரிந்ததை போல் அவருடைய குடும்பத்தை வெளிஉலகிற்கு காட்டாமல் இருந்து வருகிறார். தற்போது ராகவா லாரன்ஸின் செல்ல மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பட்டு வருகிறது.