சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் அஜித் கோபப்படும் வகையில் அவரது ரசிகர்கள் நடந்து கொண்டனர்.
கோஷம் போட ரசிகர்கள் பயன்படுத்த அந்த ஒரு வார்த்தை! உதறித் தள்ளி செம டென்சன் ஆன அஜித்! வைரல் வீடியோ
நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகும் கூட, ரசிகர்களின் பலம் சற்றும் குறையாமல் இருக்கிறார் நடிகர் அஜித். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் துப்பாக்கி சுடும் போட்டிக்காக சென்னை ஏர்போர்ட்டில் இருந்து டெல்லிக்கு செல்லும்போது சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். எப்போதும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் காணப்படும் நடிகர் அஜித் , இந்த முறை கிளீன் ஷேவ் செய்து மீசையுடன் பழைய படங்களில் இருப்பது போல இருந்தார்.
இதனால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர் .இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பும்போது சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர் .
அப்போது ரசிகர்கள் சிலர் அஜித்தை கடவுளே கடவுளே என கூறி கூச்சலிட்டனர். இதனால் நடிகர் அஜித் கோபம் அடைந்து அங்கிருந்து உடனடியாக வெளியேறி தனது காரில் ஏறி சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .