நடிகை நமீதாவிற்கு தல அஜித் கொடுத்த பரிசுப் பொருள்! ஏன், எதற்கு தெரியுமா?

நடிகை நமீதா தமிழ் , கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.


நடிகை நமீதா இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் அவர் அஜீத்துடன் நடித்த பில்லா திரைப்படத்தை நம்மால் மறக்க இயலாது. நடிகை நமீதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார் . காதல் கணவருடன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் தல அஜித்துடன் நடித்த திரைப்பட அனுபவத்தை பற்றி கூறினார். 

பில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை நமீதா தன்னுடைய சகோதரர் மற்றும் அவரது குழந்தைகள் அஜித்தை காண வேண்டுமென்று ஆசைப்படுவதாக அஜீத்திடம் கூறினார். இதற்காக அஜீத்திடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை நமீதா.

உடனே அவர்களை வரச்சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அஜித்தை காண வந்த நடிகை நமிதாவின் குடும்பத்தினருக்கு மிகவும் சுவையான சாக்லேட்டுகளை பரிசாக அளித்துள்ளார் நடிகர் அஜித். இதனை பெற்றுக்கொண்டவர்கள் அஜித்தின் வரவேற்பைக் கண்டு வியந்துள்ளனர்.

மேலும் நடிகை நமீதா பேசுகையில் , நடிகர் அஜித்துடன் நடிக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.