நடிகைகளுடன் இணைத்து சந்தேகம்! மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் சொல்லும் காரணம்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்ணுவிஷால் தன் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை முதன் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார்.


கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால் ஆவார்.

 இதனைத்தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்த திரைப்படமானது உலகம் முழுவதும் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

திரை உலகில் பல சாதனைகளை செய்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை அனுபவித்து வருகிறாராம். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன் காதல் மனைவியை விஷ்ணுவிஷால் சட்டப்படி விவாகரத்து செய்தார்.

நடிகர் விஷ்ணு விஷால் தன் கல்லூரி படித்த போது தன்னுடன் படித்த கல்லூரி தோழியான ரஜினி நடராஜ் என்பவரை உயிருக்குயிராக காதலித்து வந்தார். இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர் . இவர்களுக்கு திருமணமாகி ஆரியன் என்ற மகன் உள்ளான்.

சினிமா துறையில் யாரிடமும் சரியாக பேசிப் பழகாததால் தான் அதிகமான படவாய்ப்பு இழந்ததாகவும் ஆகையால் எல்லோரிடமும் சகஜமாக பழகும் ஒரு நடிகராக விஷ்ணு விஷால் மாறியதாகவும் கூறுகிறார். இதனால் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் உடனும் சகஜமாக பழகி வந்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது மனைவி தன் கணவர் மீது சந்தேகபட்டுள்ளார். சிறிய சந்தேகமாக ஆரம்பித்த இவர்களது குடும்ப பிரச்சினை நாளடைவில் மிகப்பெரிய பிரச்சனையாக விசுவரூபம் எடுத்தது. ஆகையால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

காதல் ஒன்றை தன் வாழ்க்கையில் உண்மையாக இருந்து வந்ததாகவும், அதுவும் தற்போது இல்லை எனவும் விஷ்ணுவிஷால் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். 

தன்னுடைய மனைவியின் சந்தேக குணமே தங்களது விவாகரத்துக்கு காரணம் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.