மனைவியுடன் விவகாரத்து..! புதுக் காதலியுடன் இருக்கும் வீடியோவை முதல் முறையாக வெளியிட்ட விஷ்ணு விஷால்! ஏன் தெரியுமா?

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து புதிதாக விடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.


தமிழ் திரைஉலகில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். பின்னர் முண்டாசுப்பட்டி, குள்ளநரி கூட்டம் , ராட்சசன் போன்ற பல நல்ல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அதிலும் அவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு தன்னுடன் படித்த ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். 

மனைவியை விட்டு பிரிந்து வாழும் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தப் போவதாகவும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைய போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 

அந்த வகையில் இந்த புத்தாண்டை விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து கொண்டாடினார் . அதுமட்டுமில்லாமல் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து புதிதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் FIR திரைப்படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வையாளர்களை விரைவில் தொட போகிறது . 

நீங்களும் அதனை உடனடியாக பாருங்கள் என தன்னுடைய ரசிகர்களுக்கு கூறும் விதமாக அமைந்துள்ளது . அப்போது பின்னால் இருந்து வரும் ஜுவாலா கட்டா தன்னுடைய காதலன் விஷ்ணு விஷாலுடன் இணைந்து டீசரை பார்க்குமாறு ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.