35 வயதில் 36 வயது பேட்மின்டன் வீராங்கனையை 2வது திருமணம் செய்கிறார் விஷ்ணு விஷால்..! எப்போது தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஷ்ணு விஷால் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து முண்டாசு பட்டினம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ராட்சசன், இன்று நேற்று நாளை என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். அதிலும் அவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு தன்னுடன் படித்த ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். 

தற்போது மனைவியை விட்டு பிரிந்து வாழும் நடிகர் விஷ்ணு விஷால் 36 வயதாகும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என ஜுவாலா கட்டா சமீபத்தில் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

கூடிய விரைவில் திருமண தேதியை முடிவு செய்தபின்பு அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு அறிவிக்க இருக்கிறோம் என ஜுவாலா கட்டா கூறினார். இந்த அறிவிப்பு விஷ்ணு விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது எப்ஐஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெல்லை வரும் ஊரடங்கு உத்தரவால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.