நடிகர் விஷாலின் வருங்கால மனைவி ஒரு நடிகை தெரியுமா ??

நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ள உள்ள அனிஷா ஒரு நடிகை என்பது தெரியவந்துள்ளது.


  நடிகர் விஷால் வரலட்சுமியை காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வசிப்பதாகவும் கூறப்பட்டது- இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை வரலட்சுமி திட்டவட்டமாக மறுத்தார்.

 இந்த நிலையில் நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் யார் என்பதை வெளியிடாமல் விஷால் ரகசியம் காத்து வந்தார். இதனை தொடர்ந்து பலரும் பல பெண்களை விஷாலுடன் இணைத்து இவர் தான் விஷாலின் வருங்கால மனைவி என்று செய்திகளை பரப்பினர். இதனால் பொறுமை இழந்த விஷால் தற்போது தனது வருங்கால மனைவி யார் என்பதை வெளியிட்டுள்ளார்.

  நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று விஷால் கூறியுள்ளார். மேலும் தனது வருங்கால மனைவியின் பெயர் அனிஷா அல்லா ரெட்டி என்று தெரிவித்துள்ளார். ஆனால் அனிஷாவை பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை.

 இது குறித்து விசாரித்த போது அனிஷா தெலுங்கு நடிகை என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி மற்றும் பெல்லி சுப்புலு ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் அனிஷா நடித்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த இரண்டு படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகி வேடத்திற்காக அனிஷா காத்திருந்ததாக சொல்லப்பட்டது.

  ஆனால் தற்போது விஷாலுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதால் நடிப்பு ஆசையை அனிஷா கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஷால் திருமண தகவலை வெளியிடுவதற்கு முன்னரே அனிஷா அவருடனான திருமண தகவலை அனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.