எந்த பெண்ணையும் இதுவரை கை நீட்டி அடித்தது இல்லை..! ஆனால் அந்த நடிகையை அடித்தேன்! விஷால் வெளியிட்ட திடுக் தகவல்!

நடிகர் விஷால் தான் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தில் நடிகைஅகன்ஷாவை அடித்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.


நடிகர் விஷால் தற்போது சுந்தர் .சி இயக்கத்தில் ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அகன்ஷா பூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சாரா ,முதலியோரும் நடித்துள்ளனர்.

தற்போது நடிகர் விஷால் தன்னுடைய ஆக்சன் திரைப்படத்தை பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒன்றில் பங்கேற்ற போது பேசியிருந்தார். அப்போது பேசிய நடிகர் விஷால் ஆக்சன் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றியும் திரைப்பட அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் தன்னுடன் நடித்த நடிகர்கள் நடிகைகளை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார். இயக்குனர் சுந்தர். சி- யின் கனவு சங்கமித்ரா திரைப்படம் தான் . ஆனால் அந்த திரைப்படம் வெளியாவதற்கு சிறிது தாமதம் ஆகும் என்பதால் அவர் ஆக்ஷன் என்ற திரைப்படத்தை இயக்குவதில் களமிறங்கினார்.

இதுவரை விஷாலின் திரைப்பட பயணத்தில் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய சண்டை காட்சிகள் இந்த திரைப்படத்தில் அமைந்திருப்பதாக அவர் கூறியிருந்தார். சில சண்டைக் காட்சிகளில் நடித்தபோது மரணத்தையும் கூட தன் கண்களால் பார்த்ததாக நடிகர் விஷால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பேசிய நடிகர் விஷால் இதுவரை தான் எந்தப் பெண்ணையும் கைநீட்டி அடித்ததில்லை எனவும் ஆனால் இந்த ஆக்ஷன் திரைப்படத்திற்காக அகன்ஷாவை ஒரு காட்சியில் அடித்ததாகவும் கூறினார். அதற்காக இந்நேரத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன் எனவும் நடிகர் விஷால் கூறியிருந்தது அங்கு இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.