நடிகர் விமலின் டாக்டர் மனைவி 8 மாத கர்ப்பம்..! ஆனாலும் கொரோனாவை ஒழிக்க பணியாற்றி நெகிழ வைத்த சம்பவம்!

8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் நடிகர் விமலின் டாக்டர் மனைவி கொரோனாவை ஒழிப்பதற்காக தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பணியை சிறப்பாக செய்து அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.


நடிகர் விமல் பொதுவாகவே கிராமத்து பாங்கான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு பலரும் ரசிகர்களாக மாறியுள்ளனர். நடிகர் விமலுக்கு மணப்பாறை அருகே சொந்த ஊர் உள்ளது.

ஷூட்டிங் இல்லாத சமயத்தில் இவர் சொந்த ஊரில் உள்ள அம்மா அப்பா மற்றும் தன்னுடைய மனைவியுடன் இருப்பதையே அதிகம் விரும்புவார். விமலின் மனைவி அவர்களுடைய சொந்த ஊரிலேயே மருத்துவராக பணியாற்றி வருகிறார். தற்போது 8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அவர் கொரோனாவை ஒழிப்பதற்காக தன்னால் முடிந்த முயற்சிகளையும் மக்களுக்கு தேவையான சிகிச்சைகளையும் வழங்கி வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண் என்றாலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி நல்ல முறையில் அவர்களை தேற்றுகிறார். அவருடைய பணியை பார்த்த உடன் பணியாற்றுபவர்கள் விமலின் மனைவிக்கு எழுந்து நின்று கைகளைத் தட்டி பாராட்டுகளை தெரிவித்திருக்கின்றனர். 

இதனைப்பற்றி நடிகர் விமலிடம் கேட்டபொழுது, என்னுடைய மனைவி பொதுவாகவே எல்லாவற்றிலும் பர் ஃபிட்டாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர் ஆவார். ஆகையால்தான் உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி என்றும் பாராமல் என் மனைவி கடந்த வாரம் வரை மருத்துவமனைக்கு சென்று பணியாற்றினார்.

இதையடுத்து அவர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்கு விடுமுறை தற்போது வழங்கப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியும் அப்பா அம்மாவுடன் சந்தோஷமாக எங்கள் கிராமத்தில் வசித்து வருகிறோம். இங்கு மக்களிடத்தில் கொரோனாவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 

அதுமட்டுமில்லாமல் இங்கு உள்ளூரில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து தெருக்களில் கிருமிநாசினிகளை நாங்கள் தெளித்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் இங்கு இருப்பவர்களை டெட்டால் , லைசால், சோப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தி இருக்கிறோம்.

மேலும் பேசிய அவர் இந்த ஊரடங்கு உத்தரவை நாம் அனைவரும் பின்பற்றி இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் அரசு கூறும் அனைத்தையும் நாம் பின்பற்றி நடந்து நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் தொற்றிலிருந்து நாம் நிச்சயம் காப்பாற்ற வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.