ரசிகர் மன்ற நிர்வாகி அகால மரணம்! அரை மணி நேரம் போனில் கதறிய விஜய்..! பிறகு அவர் கொடுத்த வாக்குறுதி!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகி அகால மரணமடைந்ததால் அவரது குடும்பத்தாருக்கு அரை மணி நேரம் போனில் பேசி நடிகர் விஜய், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் நற்பணி மன்றத்தின் நிர்வாகி சிறுநீரக செயலிழப்பால் பரிதாபமாக கடந்த வாரம் உயிரிழந்திருக்கிறார். இதனைக் குறித்து தகவல் அளிக்க மன்றத்தின் சார்பில் இருந்து நடிகர் விஜய்க்கு தொடர்ந்து போன் செய்யப்பட்டது.

அவரது போன் சுவிட்ச் ஆப் இல் இருந்ததால் நடிகர் விஜய்யை அவர்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனையடுத்து நற்பணி மன்றத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜயின் உறவினர்களுக்கு இந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு அவர்கள் இந்த தகவலை கூறியிருக்கிறார்கள்.

இந்த தகவல் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதனை பற்றி அறிந்த விஜய், உடனடியாக உயிரிழந்த நாமக்கல் மாவட்ட நிர்வாகி அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அவர்களது குடும்பத்தினரிடம் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்பு நிச்சயம் உங்களை வந்து நான் பார்க்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு தேவையான எல்லா வித உதவிகளும் உடனடியாக வந்துசேரும் எனவும் அவர் நிர்வாகியின் குடும்பத்தாரிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார்.