நடிகர் விஜய் மகள் தோழிகளுடன் சில் பண்ணும் புகைப்படம்..! முதல் முறையாக வெளியானது..!

பிரபல நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷா அவரது தோழிகளுடன் சில் செய்துகொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறப்பவர் நடிகர் விஜய் ஆவார். இவர் நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 நடிகர் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நடிப்பு மற்றும் டைரக்ஷனில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் விஜய்யின் மூத்த மகன் சஞ்சய் ஷார்ட் பிலிம் எடுத்து அதை வெளியிட்டு வருகிறார். இவர் வேட்டைக்காரன் திரைப்படத்தில் அவரது தந்தையான நடிகர் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் இரண்டாவது மகள் திவ்யா சாஷா பாடகியாக வேண்டும் என்று பயிற்சி பெற்று வருகிறார். இவர் தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய்யுடன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திவ்யா சாஷா தனது தோழிகளுடன் இணைந்து சில் செய்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.