நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு! விஜய் போட்ட உத்தரவு! டென்சனில் ரசிகர்கள்!

சர்கார் பட ரிலீஸ் நேரத்தில் நம்மை ஓட ஓட விரட்டிய அ.தி.மு.க.வை நாம் எதிர்க்கலாம் என்று சொன்ன ரசிகர்களிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?


நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் என்று ரஜினி எஸ்கேப் ஆகிவிட்டார். அதனால் அவரது ரசிகர்கள் கடும் அப்செட். இந்த நேரத்தில் தேர்தலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் அவரிடம் கேட்கப் போனவர்கள் நொந்துபோய் திரும்பியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் இலவசங்களை விமர்சனம் செய்த காரணத்தால் சர்கார் படத்தை வெளியிட முடியாமல் அ.தி.மு.க.வினர் விரட்டியடித்தனர். இலவசத்தை விமர்சனம் செய்த காட்சிகளை வெட்டியபிறகே படத்தை ஓட விட்டனர். அதனால் ஒவ்வொரு விஜய் ரசிகரும் ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் களம் காணும் அ.தி.மு.க.வுக்கு எதிராக கடுமையாக பிரசாரம் செய்து, தோற்கடிக்க வேண்டும், ஒருசில இடங்களில் விஜய் மன்றத்தின் சார்பில் தேர்தலில் நிற்கவும் அனுமதி வேண்டும் என்று விஜயை சந்தித்து அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

ரசிகர்கள் சொன்னதை முழுமையாக கேட்டுக்கொண்ட விஜய், ‘‘இப்போ வேணாம்’’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நாம் தேர்தலில் நிற்க வேண்டாம், ஆனால், அ.தி.மு.க.வை மட்டும் எதிர்க்கலாம் என்று கேட்டதற்கும் ரஜினி பாணியில், ‘அமைதியா இருங்க’ என்று சொல்லிவிட்டாராம்.

ஏன் இப்படி சொல்கிறார் என்று விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, ‘‘ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. என்று நினைத்துத்தான் விஜய் கிண்டல் செய்தார். ஆனால், கடுமையாக பதிலடி கொடுத்துவிட்டார்கள். இது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும், இன்னமும் இரண்டு ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது.

அதனால் தேவையில்லாமல் இப்போது வம்பு இழுத்தால் அடுத்த படங்களுக்கும் சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதுவே சட்டமன்றத் தேர்தல் என்றால் தைரியமாக எதிர்ப்பார்...’’ என்று சொன்னார்.

நல்ல வீரம்தான்.