மாஸ்டர் படத்துல நான் தான் ஹீரோ..! விஜய் வில்லன்..! மேடையில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி! அதிர்ந்த தளபதி ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தில் தான் தான் ஹீரோ என்றும் விஜய் வில்லன் என்றும் நடிகர் விஜய் சேதுபதி பேசியதை கேட்டு பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


சென்னையில் நடைபெற்ற மாஸ்டபர் பட ஆடியோ விழாவில் பங்கேற்று நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, நான் விழாவிற்கு வேண்டும் என்றே தாமதமாக வரவில்லை. நெல்லையில் படப்பிடிப்பு இருந்தது. அதனை முடித்துவிட்டு வர தாமதமாகிவிட்டது. விஜய் சாரை முதல் முறை பார்த்த போதே நான் அதிகம் பேசுவேன், எனக்கு வாய் கொஞ்சம் அதிகம் என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே பண்ணுங்கனு சொல்லிட்டார். அவர் கூட முதல் முறையாக போட்டோ சூட்டுக்கு வந்திருந்த போது மிகவும் பிடித்துப்போனது. விஜய் சார் எவ்ளோ பெரிய மாஸ் ஹீரோனு எல்லாருக்கும் தெரியும். அவர் கூட ஒரு படத்துல நடிக்குறது ரொம்ப பெரிய விஷயம்.

மாஸ்டர் பர்ஸ்ட் லுக் வெளியான போது போஸ்டர் டிசைனரை விஜய் சாரே நேரடியாக அழைத்து அவர் பெயருக்கு இணையாக என் பெயரும் இருக்கனும்னு அவர் கேட்டுக் கொண்டார். ஒரு நாள் ஏன் சார் நீங்க ரொம்ப பேசுறது இல்லனு கேட்டேன், அதுக்கு நான் மற்றவர்கள் என்ன பேசுறாங்கனு கவனிக்குற கேரக்டர்னு என்னுட்ட சொன்னார்.

விஜய் சாரிடம் இருந்து நானும் நிறைய கற்றுக் கொண்டேன். படத்துல எல்லாரும் என்னை வில்லன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க. உண்மையில் படத்துல நான் தான் ஹீரோ. எப்டினா, நான் வில்லன்னாலும் எனக்கு வில்லன் விஜய் சார் தான். அப்படி பார்த்த நான் தான ஹீரோ. இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.