மாஸ்டர் பட விழா மேடையில் அஜித் பெயரை கூறிய நடிகர் விஜய்..! அரங்கமே அதிர்ந்த நிமிடம்! ஏன் தெரியுமா?

மாஸ்டர் பட விழாவில் நடிகர் விஜய் நடிகர் அஜித் குறித்து பேசிய போது அரங்கில் இருந்தவர்கள் கரகோஷத்தால் அதிர்ந்தது.


சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசியதாவது. விழாவிற்கு வரும் போது என்ன உடை அணியலாம் என்று யோசித்தேன்.

அப்போது தான் நம்ம நண்பர் அஜித் போடுவது போல் கோட் சூட் போடலாம் என்று முடிவு பண்ணினேன். உடனே கோட் சூட் போட்டு விழாவிற்கு வந்தேன். இதுநாள் வரை எந்த விழாவிலும் நடிகர் விஜய் அஜித் குறித்து பேசியது இல்லை. முதல் முறையாக அஜித் பெயரை தனது பட விழாவில் நண்பர் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட அனைவரும் அரங்கில் இருந்தவர்கள் உட்பட உற்சாக கரவொலி எழுப்பினர். முன்னதாக இன்று காலை தருதல என்கிற பாடல் வரியுடன் வெளியான மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டால் அஜித் ரசிகர்கள் டென்சன் ஆகினர். இதனால் மண்டியிட்ட வாத்தி என்று ட்விட்டரில் விஜயை கிண்டல் செய்து அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.

ஆனால் பட விழாவில் நடிகர் விஜய் அஜித்தை குறிப்பிட்டு பேசியது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.