வன்முறையை தூண்டியதாக புகார்! நடிகர் விஜயை வெள்ளி இரவு கைது செய்யத் திட்டம்?

சர்கார் படத்தில் ஆளும் கட்சியையும், ஜெயலலிதாவையும் விஜய் அவமானப்படுத்தி இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள். விஜய்க்கு பாடம் புகட்டுவதற்காக வெள்ளி இரவு கைது செய்து, இரண்டு நாட்கள் சிறையில் அடைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு வருகிறது.


’சர்கார்” படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லியை வில்லி பாத்திரத்திற்கு சூட்டியது எந்த வகையிலும் சாதாரண நிகழ்வு அல்ல என்பது சாமான்ய மக்களுக்கும் தெரியும். இலவசமாக பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காகவே கோமளவல்லி என்ற பெயர் சூட்டப்பட்டது. அது மட்டுமின்றி, ஜெயலலிதா போன்று உடை அணிவித்ததும், திமிர் பேச்சும் அச்சு அசலாக ஜெயலலிதாவை ஞாபகப்படுத்தியது. இது மட்டுமின்றி ஜெயலலிதா கொடுத்த இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை மட்டும் கொண்டுவந்து தீயில் போடுவதாகவும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே நடிக்கவும் செய்திருந்தார்.

ஆளும் கட்சியை எதிர்க்கும் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம் போன்ற பலரும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இதனை சன் நிர்வாகம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. அதனால் இப்போது ஊர் ஊராக தியேட்டர் முன்பு அ.தி.மு.க. போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மதுரையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சர்கார் குழுவிடம் இருந்து எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில், இன்று சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம், அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாம். அதனைத் தொடர்ந்து வெள்ளி இரவு விஜய்யை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாகத்தான் விஜய் சர்காரில் வன்முறையை தூண்டும் வகையில் வசனம் பேசியுள்ளதாக அமைச்சர் சண்முகம் பேசியுள்ளார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதாவது இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துமாறு காட்சி வைத்திருப்பது தீவிரவாதிகளின் செயல் போல் உள்ளது என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவை தவறாக விமர்சனம் செய்துவிட்டு, தமிழகத்தில் யாரும் நடமாட முடியாது என்பதை அழுத்திச் சொல்வதற்காகவே இந்த கைது நடவடிக்கை இருக்குமாம். எந்த வகையிலும் கைது செய்யும் விவகாரத்தில் நீதிபதி பின்வாங்கக்கூடாது என்பதற்காக, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் விஜய் மட்டும் கைது செய்யப்படுவாரா அல்லது கலாநிதி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோரும் மாட்டுவார்களா என்பது விரைவில் தெரியவரும். 

தகவல் தெரிந்து விஜய் எஸ்கேப் ஆகிவிடாமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்!