செல்லும் இடம் எல்லாம் உதயநிதியின் உளறல்! தலையில் அடித்துக் கொள்ளும் திமுகவினர்!

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி பிரச்சாரத்தால் திமுகவினரே அதிர்ச்சியில் உள்ளனர்.


கடந்த புதன்கிழமை அன்று சென்னையில் தேர்தல் பணிகளை துவக்கினார் உதயநிதி ஸ்டாலின். அன்றைய தினம் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அழகான மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதனைக் கேட்டு தமிழச்சி தங்கபாண்டியன் வெட்கம் அடைந்தார். அதன் பிறகு இந்த இருவரை வைத்துதான் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் இறக்கை கட்டி பறக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் வேலூரில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை காவலாளி அல்ல கோமாளி என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் அரசியல் அனுபவம் என்ன உதயநிதியின் அரசியல் அனுபவம் என்ன என்று திமுகவினரே கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மோடியின் செயல்பாடுகளையோ அவருடைய திட்டங்களையோ விமர்சிப்பதில் தவறில்லை ஆனால் தனிப்பட்ட முறையில் மோடியை கோமாளி என்று உதயநிதி ஸ்டாலின் கூற அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சமூகவலைதளங்களில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழச்சி தங்கபாண்டியன் சர்ச்சையை தொடர்ந்து மோடி சர்ச்சையில் உதயநிதி சிக்கியதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். அரசியலில் புதியவரான உதயநிதி ஸ்டாலின் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வந்து பேசினால் பிரச்சினை இருக்காது மாறாக இப்படி வாயில் வந்ததை உளறினால் அது கண்டிப்பாக தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுகவினரை பேச ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை இரண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தான் உதயநிதி பேசியுள்ளார். அந்த இரண்டு பிரச்சாரத்தையும் மையமாக வைத்து சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அடுத்தடுத்த பிரச்சாரங்களில் கவனம் செலுத்துமாறு உதயநிதியை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்த வேண்டும்.