3 வயது மூத்த நடிகை மீது29 வயது வாரிசு நடிகருக்கு ஆசை! அவரே வெளியிட்ட தகவல்!

பிரபல நடிகர், தான் நடிக்கும் படத்தின் கதாநாயகியின் மீது ஆசை இருந்ததாக கூறியிருப்பது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஷ்ரத்தா கபூர். இவர் தற்போது நடிகர் டைகர் ஸ்ஷ்ராஃப் உடன் இணைந்து "பாகி" திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வருகிற மார்ச் 6-ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் டைகர் ஷ்ராப் மற்றும் ஷ்ரத்தா கபூர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் டைகர் ஷ்ராஃப் தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஷ்ரத்தா கபூர் மீது ஆசை கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இருவரும் ஒரே பள்ளியில் படித்ததாகவும் அப்போது அவருடைய அழகில் தான் மெய்மறந்து போனதாக டைகர் ஷ்ராப் கூறியுள்ளார். பள்ளியின் முக்கிய இடங்களில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவருடைய அழகு என்னை கிரங்கடிக்க வைத்தது"

இதற்கு பதிலளிக்கையில், "எனக்கு இதுபற்றி டைகர் ஷ்ராஃப் எதுவும் கூறவில்லை. கூறியிருந்தால் நான் நிச்சயமாக யோசித்திருப்பேன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். இதேபோன்று சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் மீது ஆசையிருந்ததாக கூறியது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.