மூடுறா ராஸ்கல்! இளம் நடிகருக்கு ஷாக் கொடுத்த சரத்குமார் மகள் வரலட்சுமி!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் சுன்தீப் கிருஷ்ணனை நடிகை வரலட்சுமி சரத்குமார் ஷட்டப் ராஸ்கல் என்று தன்னுடைய டுவிட்டர் பதிவின் மூலம் கூறியிருக்கிறார்.


தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் வருபவர் நடிகர் சுந்திப் கிருஷ்ணன் ஆவார். இவர் தற்போது தெனாலி ராமகிருஷ்ணா BA.BL எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்த திரைப்படத்தில் நடிகர் சுந்திப் பல போராட்டங்களை சந்திக்கும் வழக்கறிஞராக வலம் வருகிறார் . இவருக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சுந்திப் கிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

 அந்த பதிவில் மதிய வணக்கம் வரு மேடம், எந்த கோணத்தில் பார்த்தாலும் நீங்கள் மிகப்பெரிய டானாக எனக்கு காட்சி அளிக்கிறீர்கள். எப்படி இது சாத்தியமாகிறது? எனக்கு புரியவே இல்லை என்று கூறியிருக்கிறார். இதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் , ஹாஹா.. ஷட்டப் ராஸ்கல் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். 

தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தெனாலிராமன் BA.BL திரைப்படத்தில் நடிகர் சுந்திப் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.