இளையதளபதி பட்டத்தை என்னிடம் இருந்து விஜய்க்காக எஸ்ஏசி திருடியது எப்படி? உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் சரவணன்..!

பிரபல நடிகர் சரவணன் தன்னுடைய படங்களில் டைட்டில் கார்டில் பயன்படுத்தி வந்த இளைய தளபதி என்ற பட்டம் எவ்வாறு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் விஜய்க்கு பயன்படுத்தினார் என்று மனம் திறந்துள்ளார்.


தற்போது தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு முதலில் இருந்த பட்டம் இளைய தளபதி. இந்நிலையில் இளைய தளபதி என்ற பட்டம் முதன்முதலில் பிரபல நடிகர் பிக் பாஸ் சரவணன் அவர்களுக்கு தான் இருந்து வந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சரவணன் நடித்த நல்லதே நடக்கும் என்ற திரைப்படத்தில் டைட்டில் கார்டில் இளையதளபதி என்று நடிகர் சரவணன் பெயர் உள்ளது போல ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது சம்பந்தமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சரவணன் சேலத்தில் இருந்து நான் சினிமாவுக்கு சென்றதால் எனக்கு சேலத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டிருந்தார். 

அந்த விழாவில் பேசிய திமுக வின் வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் தளபதி போல சுத்திக் கொண்டிருந்த சரவணன் சினிமாவுக்கு சென்று விட்டார். அவருக்கு ஏதாவது பட்ட பெயர் வைக்க வேண்டாமா? தளபதி என்று வைத்து விடலாம் என்று நினைத்தேன் . ஆனால் சென்னையில் தளபதி மு க ஸ்டாலின் உள்ளார். ஆகையால் இவருக்கு இளைய தளபதி என்று கொடுத்துவிடலாம் என்று முதன்முதலாக அவர்தான் என்னை இளைய தளபதி என்று உச்சரித்தார்.

மேலும் பேசிய அவர் அந்த நிகழ்வுக்குப் பிறகு நான் நடிக்க ஆரம்பித்த திரைப்படம்தான் நல்லதே நடக்கும். முதல் முதலாக அந்த திரைப்படத்தின் டைட்டில் கார்டில் இளையதளபதி சரவணன் நின்று போட்டிருந்தார்கள். அதன் பின்னர் நடித்த திரைப்படங்களில் இளைய தளபதி என்று டைட்டில் கார்டில் போட ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப் பின்னர்தான் எனக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. படவாய்ப்புகள் குறைந்ததால் இந்தப் பட்டத்தை நானும் மறந்திருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு இளைய தளபதி என்று டைட்டில் கார்டில் போடப்பட்டு இருந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியான நானும்  என் அண்ணனும் உடனடியாக விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஆபீசுக்கு சென்று என் டைட்டிலை  ஏன் சார் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் உங்களுக்கு படம் வந்தால் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதன் பிறகு எனக்கும் படவாய்ப்புகள் சரியாக அமையாததால் நானும் அப்படியே ஒதுங்கி விட்டேன் என நடிகர் சரவணன் கூறியுள்ளார்.