இதுவரை 300 பெண்களுடன் உறவில் இருந்துள்ளேன்..! நடிகர் வெளியிட்ட ஷாக் தகவல்! இளம் நடிகை சொன்ன பதில்!

இந்தி திரையுலகின் பிரபல நடிகரான சஞ்சய்தத், தான் இதுவரை 300 பெண்களுடன் உறவில் இருந்துள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.


நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான பாணிபட் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் தோன்றியபோது நிகழ்ச்சி தொகுப்பாளர் பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அப்போது பதிலளித்த சஞ்சய்தத் இதுவரை 300 பெண்களுடன் தான் உடலுறவில் இருந்துள்ளதாக கூறினார். மேலும் அவர் 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழக்கம் வைத்திருப்பதை அறிந்து அவரை பாராட்டினார்.

மேலும் பேசிய அவர், எப்போதும் தனது எண்களின் பதிவை கணக்கு வைத்திருப்பதாகவும், தற்போது தனது இணை நடிகை கிருதி சானோனை தனது 309 வது காதலியாக கருதுவதாகவும், சஞ்சய்தத் நகைச்சுவையாக கூறினார்.

சஞ்சய் தத்தின் இந்த பதிலை பார்த்து எல்லோரும் சிரித்தாலும், இளம் நடிகை தீபண்ணிதா சர்மா அதற்கு எதிராக கடுமையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். 

இதுவே சஞ்சய்தத் கூறியதைப் போல் வேறு ஏதாவது ஒரு நடிகை கூறியிருந்தால் இது இவ்வளவு நகைச்சுவையாக மாறியிருக்காது. மாறாக சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கும்.

மேலும் இது பாலின அடிப்படையில் சமூகத்தின் பாசாங்குத்தனத்தைக் காட்டுகிறது என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவருடன் உடன்பட்ட பிற ட்விட்டர் பயனர்களும் நடிகைக்கு ஆதரவளித்தனர்.

தற்போது இந்த சம்பவமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.