பாட்டிலை உடைத்து அரைத்து விழுங்கிய சீரியல் நடிகர்! 6 மணி நேரம் அறைக்குள் துடியாய் துடித்த பரிதாபம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

பிரபல சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து அவருடைய நண்பர் வெளியிட்டுள்ள தகவல் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து வெள்ளித்திரை காலடி எடுத்து வைத்தவர் சாய் பிரசாந்த்.

இவர் முந்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய பெற்றோர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். சென்னை வளசரவாக்கத்தில் இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதியன்று, இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய மரணம் குறித்து நடிகர் பப்லு தற்போது பரபரப்பான செய்திகளை வெளியிட்டுள்ளார். அதாவது, சாய் பிரசாந்த் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், எப்போதும் செத்துவிடுவேன் செத்துவிடுவேன் என்று அவருடைய நெருங்கிய வட்டாரத்தை மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏதாவது பெண்ணை காதலித்த பின்னர், அவரின் மீது சந்தேகப்படுவது போன்ற கோழைத் தனமான செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்று பப்லு கூறினார். தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்த சாய் பிரஷாந்த் கடைசியாக தற்கொலை செய்து கொண்டே இறந்தார். பலவகையான கொடூரமான முயற்சிகளின் மூலம் சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார். 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாய் பிரசாந்த் தன்னுடைய அறையில் செத்து போனார் என்று பப்லு கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.