சரவணன் மீனாட்சி புகழ் பிரபல நடிகர் ராபர்ட் ராஜசேகர் காலமானார்! திரையுலகினர் கண்ணீர்!

பிரபல நடிகர் ராபர்ட் ராஜசேகர் சென்னையில் காலமானார்.


ராபர்ட் - ராஜசேகர் என்பவர்களை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு மற்றும் மனசுக்குள் மத்தாப்பூ ஆகிய படங்களை இயக்கிய இரட்டையர்கள் இவர்கள். பிறகு ராபர்ட் - ராஜசேகர் தனியாக பிரிந்துவிட்டனர். ராஜசேகர் நடிகராகிவிட்டார். பல படங்களில் குணசித்திர வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது சீரியல்களில் ராஜசேகர் நடித்து வந்தார். வெறும் ராஜசேகர் என்றால் யாருக்கும் தெரியாது. ராபர்ட் ராஜசேகர் என்றால் தான் தற்போதும் இவரை தெரியும். சீரியல்களில் பிசியாக இருந்த ராஜசேகர் சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில திடீரென ராஜசேகர் இன்று காலமானார். அவர் இறந்த செய்தியை பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ராஜசேகர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தவர். முதல் சீசனில் சரவணன் தந்தையாகவும் அடுத்தடுத்த சீசன்களில் தாத்தாகவும் முத்திரை பதித்தவர் இவர். இவரது மறைவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.